Tuesday, August 25, 2015

பால்யம் தேடி

பால்யம் தேடி 
****************
நகர் வாழ்க்கை  நகர்கிறது 
ஆண்டு பலவாக....

வயிற்றின் தேவைகள் 
வசதியின் ஆசைகள் 
வைத்திய ஆதாரங்கள் 
இன்னும் பல சுற்றி வளைத்து 
முளையடித்து கட்டி வைத்துள்ளன 
இந்த நகர மையத்தில்.

வாரம் ஒரு முறை 
தொலை பேசி அழைத்து 
நகரின் வெளியில் 
இலவச வாகனத்தில் 
இடம் தேடுவதாய் அலைகிறேன்...
இன்னுமொரு வீடு கட்ட 
எந்த மனை ஆகுமென்று கேட்டு 

ஒவ்வொரு வாரமும் 
ஒவ்வொரு நிலம், 
ஒவ்வொரு வண்டி  ஒவ்வொரு வழி.....

என்னை அழைத்து வரும் 
நில வியாபாரிகளுக்கு 
தெரிய வாய்ப்பில்லை 
நான் தேடிக் கொண்டிருப்பது 
எங்கோ கிராமத்தில் 
எப்போதோ தொலைத்த 
என் பால்யத்தை என்று...!!!