Sunday, June 17, 2012

தந்தையே....!!!

(சென்ற ஆகஸ்ட் 2010 இல் நான் எழுதிய "Miss You My Dad " என்ற ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பு -  தந்தையர் தினத்திற்காக )
 
கண்ணிமைகள் நினைவுறுத்துகின்றன
உன் முகத்தை...
உன் கருணையை நினைத்து ஒலிக்கின்றன
என் நினைவு மணிகள்...
காலங்காலமாய் செவிடாகி இருந்த
காதுகளை அடைகின்றன...
கண்கள் உருவாக்கிய அந்த
நினைவு மணிகள்....!
 
கடற்கரை அலையினில்...
கால் தடுமாறிடும் வேளையில்...
உன் கை விரல் கோத்து
பயம் விரட்டிய தருணங்கள்...
ஈர மணலில் கோபுரம் கட்ட
கைகள் கறையாகிப் போனது..
இரவின் மடியில் உன் அடிவயிறில்
முகம் புதைத்து உறங்கியது...
 
மழைக் காலத்தில் ஒரே படுதாவில்
உன் கால்களுடன் பின்னப் பின்ன
நடந்தது...
வெயில் காலத்தில் வியர்வை வழியும்
அதை உன் பட்டுத்துணியால்
துடைத்தது..
அம்மாவும் நீயும் சண்டையிட
நான் அழுதது...
அவும் நீயும் இணைந்த பின்
எனைச் சேர்த்து அணைத்தது...
 
பொய்க் காய்ச்சல் காட்டி
பள்ளிக்குச் செல்லாத என்னை
மிட்டாய் தந்து நீ
மீண்டும் பள்ளிக்கு அனுப்பியது...
மதில் மேல் அமர்ந்து
குட்டிப் பூனைகள் மேல் கல் எறிந்த
எனக்கு...அத்தனை உயிரிலும்
அன்பு கொள்ளச் சொல்லி பணித்தது ...
 
இன்னும் எத்தனையோ.. எத்தனையோ...
நினைவின் மணிகள் ஒலிக்கின்றன....
மீண்டும் அந்த தருணங்களுக்காக....
உன்னுடைய அந்த ஸ்பரிசங்களுக்காக
ஏங்கித் தவிக்கும் இந்த வேளையில்..
உன்னை மிகவும் இழந்ததாய் உணர்கிறேன்.
 
ஆண்டுகள் கடந்தன...காலங்கள் ஓடின...
நீ வேண்டும்... என்று விழைகிறேன் இதோ..
இந்த என் சாவுப் படுக்கையில்....!!!

Wednesday, June 13, 2012

இன்றைய ஹைக்கூ -3 13 /06 /2012

பூவுதிர்வு...
பூவில் ஒளிந்த விதைகளையும்
விதைகளில் ஒளிந்திருந்த
விருட்சங்களையும்
நினைத்துப் பார்க்கவில்லை -
முட்டாள் காற்று..!
இணை பிரியா தூரம்:
இமைக்கும் விழிக்கும்
இத்தனை தூரமா..?
இடையில் நீ..!
தூண்டில்
மீனே ...
தூண்டிலாய்...
உன்விழி...!!

Saturday, June 9, 2012

இன்றைய ஹைக்கூ - 2 ----- 09 /06 /2012

இன்றைய ஹைக்கூ - 2 
09 /06 /2012 
 
 
பாமரம்..!!
குலை குலையாய்
காய்த்துக் குலுங்கும்
அந்த மாமரத்துக்கு
தெரிந்ததே இல்லை..
தன் கனியின் இனிப்பு...!!!
 
********
 
மயக்கம்..!!
நிலமாய் நான்..
நீராய் நீ...
உன்னை அணைப்பது
நானா
என்னை கரைப்பது
நீயா
என்று உணராமலே..!!!

Saturday, June 2, 2012

இசை தேவனுக்கு இன்று பிறந்த நாள்..!

இசை தேவனுக்கு இன்று  பிறந்த நாள்..!

பசிப் பிணி போக்க இசைப் பணி நாடினாய்...
கசையடி மத்தியில் கனிந்தே பாடினாய்...
வசையடி தந்து வருத்தியோர்க் கெல்லாம்
இசையிலே பதிலடி எடுத்து வீசினாய்...
தோல் நிறம் நினைந்து துவண்டவர் கோடி..
பால் நிறம் பார்த்தாலே பணிந்தவர் கோடி..
குலம் சுட்டிக் கூவிடும் கோட்டான்கள் முன்னே
கொலையுண்டு வீழ்ந்து மடிந்தவர் கோடி...
கலையினில் சிறந்தும் கல்வியில் சிறந்தும்..
நிலை தடுமாறியே நின்றவர் திருந்தவே...
இசையினில் சிறந்து இமயம் தொட்டவன்
இளையராஜா நீ வாழ்க வாழ்கவே....!!
-இராஜேஸ்வரன். ஆ